Saturday 6 August 2011

மொழிகள்


ஹீப்ரூ மொழி பேசப்படும் நாடு?
இஸ்ரேல்

லட்சத் தீவுகளில் பேசப்படும் முக்கிய மொழி?
மலையாளம்

அதிக நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள மொழி?
அரபி

தமிழை உயர் தனிச் செம்மொழி என விளக்கிக் காட்டியவர்?
வெள்ளையரான கால்டுவெல்

இந்தியாவின் இணைப்பு மொழி?
ஆங்கிலம்

புத்த இலக்கியம் எழுதப்பட்டுள்ள மொழி?
பாலி

இந்தியாவில் இந்தி ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?
1965

பாமினி சுல்தான்கள் ஆதரித்த மொழி?
உருது

உலகில் வேகமாக பேசக்கூடிய மொழி?
பிரெஞ்சு

கோவா மாநிலத்தின் மொழி?
கொங்கணி

பூஜ்யம் என்ற எழுத்து இல்லாத மொழி?
ரோமானிய மொழி

உலக அளவில் கணிணி இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்தபடியாக இடம் வகிக்கும் மொழி?
தமிழ்

source : kalkandu

Wednesday 27 July 2011

நிலவைக் குறிவைக்கும் சீனா

இந்தியாவை போல சீனாவும் நிலவை குறிவைக்கிறது. 2020-ம் ஆண்டுவாக்கில் நிலவில் சீனர் ஒருவரைக் கொண்டு போய் இறக்கத் திட்டமிடுகிறார்கள்.

விண்வெளி நிலையம் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் சீனா,அந்த நிலையத்தின் ரெயில் பிட்டி அளவுள்ள ஒரு பகுதியை இந்த ஆண்டு ராக்கெட் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லவிருக்கிறது.

2013-ம் ஆண்டில் நிலவில் ஆய்வு வாகனத்தை(ரோவர்) இறக்கி ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுகிறது சீனா.

அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விண்வெளித் துறையில் விறுவிறுப்க் காட்டுகிறது சீனா.எனவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விஷயத்தில் அமெரிக்காவை சீனா முந்திவிடலாம் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

விண்வெளியில் ஒரு நாடு செலுத்தும் ஆதிக்கம்தான் அதன் திறனுக்கும்,சர்வதேச செல்வாக்குக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது. அமெரிக்கா இதில் பின்தங்கினால்,அதன் சக்தியும்,செல்வாக்கும் சரிவடைந்ததாகத்தான் தோன்றும் என்று உஷார்ப்படுத்தியுள்ளார் நாசாவின் இணை நிர்வாகியான ஸ்காட் பிரைஸ்.

நிலவுக்கு மீண்டும் அமெரிக்கர்களை அனுப்ப புஷ் நிர்வாகத்தால் தீட்டப்பட்டு, ஒபாமாவால் கிடப்பில் போடப்பட்ட திட்டத்தின் ஆதரவாளர் இவர்.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது விண்வெளித் தொழில் நுட்பத்திலும், அனுபவத்திலும் தற்போது சீனா வெகுவாகப் பின்தங்கியிருக்கிறது.ஆனால் திட்டங்களோ,அதை நிறைவற்றத் தேவையான நிதியோ சீனாவுக்கு பிரச்சினையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்கள் நிதிப் பிரச்சினையாலோ, ஆட்சி மாற்றத்தாலோ முடங்கிப் போகலாம். ஆனால் அந்த மாதிரித் தடைகள் எதுவும் சீனாவுக்கு இல்லை என்று கருதப்படுகிறது.

சீன அமைப்பில் உள்ள ஒரு பெரிய வசதி, அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு திட்டம் போடுகிறார்கள்.அதன் அடிப்படையில் அவர்களால் கிடுகிடுவென்று முன்னேறிவிட முடியும் என்கிறார், விண்வெளி நிபுணர் பீட்டர் பாண்ட்.

பூமியில் மட்டுமின்றி, விண்வெளியிலும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போட்டி தொடங்கிவிட்டது.

source : dailythanthi

Monday 25 July 2011

24 கோடி யூத்கள் ரெடி



இப்போதில் இருந்து படிப்படியாக அதிகரித்து 2030ல் இந்தியாவின் வேலைபார்க்கும் இளைஞர்கள் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும்.இவர்கள் உலகின் பல நாடுகளில் பரவி இருப்பர்.

இதே கால கட்டத்தில், சீனாவில் ஒரு கோடி பேர்தான் வேலை செய்யும் யூத்களாக இருப்பர். பிரேசிலிலோ ஒரு கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்களாக இருப்பர்.

கருத்தரிப்பு விகிதம் - மக்கள் தொகை பெருக்கம் இரண்டுமே சரிநிகர் சமமாக இந்தியாவில் இருக்கும். பிரேசில்,சீனாவில் பிறப்பும் குறைவு; இறப்பு சதவீதமும் குறைவு. இதனால் வயதானவர்கள் எண்ணிக்கை கூடும்.

இந்த நாடுகளுடன் மட்டுமல்ல, அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது,அடுத்த இருபதாண்டில் நிலைமை வெகுவாக நமக்கு சாதகமாக இருக்கும்.

இதையே இன்னொரு கோணத்திலும் சர்வே எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இப்போதுள்ள மக்கள் தொகையில், 72 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைவானவர்களாம். 47 சதவீதம் பேர் 20 வயதுக்கு குறைவானவர்களாம்.இதை வைத்து கணக்கிட்டாலே, அடுத்த இருபதாண்டில் நம் நாடு எந்த அளவில் உலகில் 'இளமை'யாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அப்போது இந்தியாவின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி என எல்லாவற்றிலும் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.ஸோ வல்லரசு கனவு நினைவாகப் போகிறது.

source : தினகரன்

இறுதி ஊர்வலம் மெதுவாக நகர்வது ஏன்?



துர்தேவதைகளைத் துரத்தவும்,இறந்தவர்கள் சொர்க்கம் செல்ல வழிகாட்டவும் இறுதி யாத்திரையின் போது மெழுகுவர்த்திகளையும், தீப்பந்தங்களையும் ஏற்றும் வழக்கத்தை ரோமாபுரி மக்கள் கொண்டு வந்தனர்.

தீப்பந்தம் என்ற பொருள் உடைய லத்தீன் சொல்லில் இருந்து இறுதிச்சடங்கு என்பதை குறிக்கும்  funeral என்ற ஆங்கில வார்த்தை தோன்றியது.

15-ம் நூற்றாண்டில் பல கிளைகளையுடைய தாங்கியில்(candelabras) மெழுகுவர்த்திகளை ஏற்றிச் சவப்பெட்டி மீது வைத்து இடுகாட்டுக்கு எடுத்து செல்லத் தொடங்கினார்கள்.மெழுகுவர்த்தி அணையாமல் இருப்பதற்க்கு இறுதியாத்திரை மெதுவாக செல்லும்.அது அப்படியே வழக்கமாகிப் போனது.

source : daily thanthi

Wednesday 13 July 2011

ஆபாச இணையதள மோசடி

                     சேலத்திலிருந்து நண்பர் ஒருவர் போன் செய்தார்.தினத்தந்தியில் பனிரெண்டாம் பக்கம் பார் என்றார்.அழகிஎன்று நினைத்து அரவாணியை அழைத்துச்சென்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்ற தலைப்பில் ஒரு செய்தி.ஏற்கனவே ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டு பரிசோதனைக்கு வந்த விஷயம் ஒன்றை பதிவாக எழுதியிருக்கிறேன்.அதனால் நண்பர் அதே போல மீண்டும் ஒரு சம்பவத்தை படிக்க கூறியிருக்கிறார்.
             தினத்தந்தி செய்தியின் சுருக்கம்: நாளுக்கு நாள் இணையதள மோசடி குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன.மோகத்தில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள் பலர்,மோசடி கும்பல்கள் நட்த்தும் இணையதளத்தில் சிக்கி பணத்தையும் மானத்தையும் இழக்கின்ற செயல்கள் தினம் தினம் நடக்கும் செய்தியாக உள்ளது.
                
            பாஸ்கரன் என்ற சோழிங்கநல்லூரைச்சார்ந்த இளைஞர் ஆபாச இணையதளம் மூலம் காண்பிக்கப்பட்ட போட்டோவை பார்த்து கிளிக் செய்து செல்போன் எண்ணை பெற்றிருக்கிறார்.போனில் மறு முனையில் பேசியவர் ஆண்.இளைஞர் குறிப்பிட்ட பெண் தான் வேண்டும் என்றும் கீழ்பாக்கம் கார்டன் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
         காருடன் காத்திருந்தவருக்கு அப்பெண் வந்து அறிமுகப்படுத்திக் கொண்ட்தும் அவசரமாக காறில் ஏற்றி பரந்திருக்கிறார்.கொஞ்ச தூரம் சென்று முகத்தைப் பார்த்த்தும் அதிர்ச்சியடைந்து விட்டார்.அவர் அரவாணி.ஏமாந்த்து தெரிந்தவுடன் காரிலிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.பணம் கொடுத்தால்தான் போக முடியும் என்று அரவாணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.
              
             வேறு வழியில்லாமல் 7500 ரூபாயை கொடுத்திருக்கிறார்.இதெல்லாம் போதாது கூடுதலாகப்பணம் கொடுஇல்லையென்றால் ஆட்களை கூட்டி வந்து அடித்துவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பிக்க மேலும் 5000 பணம் ஏ.டி.எம்மிலிருந்து அரவாணி சென்றுவிட்டார்.
            மோசமாக ஏமாற்றப்பட்ட்து அறிந்து பிறகு விபசார தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.அரவாணி சாபுபேகம் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்பான புரோக்கர்களையும் தேடி வருகிறார்கள்.பலரும் இமேஜுக்கு பயந்து புகார் கொடுக்க தயங்கும்போது பாஸ்கரன் காவல்துறைவரை போனது மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக ஆகியிருக்கிறது.
            
              நான் சில மாதங்களுக்கு முன்பு பகிர்ந்துகொண்ட பதிவில் நடந்த்தும்,இதுவும் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரிதான்.இரண்டிலும் புரோக்கர்கள் ஆண்கள்,இறுதியில் வேறு யாரோ வந்து ஏமாற்றியிருக்கிறார்கள். நிறைய கும்பல்கள் இதுபோல இருக்க வாய்ப்பிருக்கிறது.சாஃப்ட்வேர் இளைஞர்கள்,பணம் படைத்த ஆண்களும் தான் இவர்களது நோக்கம்.
              எத்தனையோ விழிப்புணர்வு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் யாராவது ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.பணமும்,உணர்வும் மூளையை மழுங்கடித்து விடுகிறது.ஆனால் பாஸ்கரனை ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம்.காவல்துறையில் புகார் செய்த்தற்காக! அவரது ஒழுக்க மதிப்பீடுகளைத் தாண்டி பார்த்தால் மோசடி பேர்வழிகளை கைது செய்ய வைத்த்து மூலம் இணையதள மோசடிகள் கொஞ்சம் மட்டுப்படும்.

source : shanmugavel

Tuesday 14 June 2011

ஓட்டை மாற்று!


                  நண்டு கடினமான ஓட்டுடன் வளர முடியாது. அதனால் அது ஆண்டுத்தோறும் தன் ஓட்டை கழற்றி விடும். புது ஓடு உருவாகி கொண்டிருக்கும் போது பழைய ஓட்டை கழற்றிவிடும்.

courtesy : dinamalar

Monday 13 June 2011

நாடே ராணுவம்!

உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டில்தான் ராணுவம் கிடையாது. ஆனால், அந்த நாட்டிலுள்ள திடசாலிகளான ஆண்கள் அனைவரும் சிப்பாய்களாக கருதப்படுகின்றனர். எப்போது படை திரட்டினாலும் அவர்கள் கட்டாயம் சேர்ந்தாக வேண்டும். எனவே, சுவிட்சர்லாந்திற்கு ராணுவம் என்று தனியாக ஒன்று இல்லாவிட்டாலும் கூட, அந்த நாட்டையே ஒரு ராணுவமாகதான் கருத வேண்டும்.

courtesy : dinamalar