Wednesday 27 July 2011

நிலவைக் குறிவைக்கும் சீனா

இந்தியாவை போல சீனாவும் நிலவை குறிவைக்கிறது. 2020-ம் ஆண்டுவாக்கில் நிலவில் சீனர் ஒருவரைக் கொண்டு போய் இறக்கத் திட்டமிடுகிறார்கள்.

விண்வெளி நிலையம் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் சீனா,அந்த நிலையத்தின் ரெயில் பிட்டி அளவுள்ள ஒரு பகுதியை இந்த ஆண்டு ராக்கெட் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லவிருக்கிறது.

2013-ம் ஆண்டில் நிலவில் ஆய்வு வாகனத்தை(ரோவர்) இறக்கி ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுகிறது சீனா.

அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விண்வெளித் துறையில் விறுவிறுப்க் காட்டுகிறது சீனா.எனவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விஷயத்தில் அமெரிக்காவை சீனா முந்திவிடலாம் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

விண்வெளியில் ஒரு நாடு செலுத்தும் ஆதிக்கம்தான் அதன் திறனுக்கும்,சர்வதேச செல்வாக்குக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது. அமெரிக்கா இதில் பின்தங்கினால்,அதன் சக்தியும்,செல்வாக்கும் சரிவடைந்ததாகத்தான் தோன்றும் என்று உஷார்ப்படுத்தியுள்ளார் நாசாவின் இணை நிர்வாகியான ஸ்காட் பிரைஸ்.

நிலவுக்கு மீண்டும் அமெரிக்கர்களை அனுப்ப புஷ் நிர்வாகத்தால் தீட்டப்பட்டு, ஒபாமாவால் கிடப்பில் போடப்பட்ட திட்டத்தின் ஆதரவாளர் இவர்.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது விண்வெளித் தொழில் நுட்பத்திலும், அனுபவத்திலும் தற்போது சீனா வெகுவாகப் பின்தங்கியிருக்கிறது.ஆனால் திட்டங்களோ,அதை நிறைவற்றத் தேவையான நிதியோ சீனாவுக்கு பிரச்சினையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்கள் நிதிப் பிரச்சினையாலோ, ஆட்சி மாற்றத்தாலோ முடங்கிப் போகலாம். ஆனால் அந்த மாதிரித் தடைகள் எதுவும் சீனாவுக்கு இல்லை என்று கருதப்படுகிறது.

சீன அமைப்பில் உள்ள ஒரு பெரிய வசதி, அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு திட்டம் போடுகிறார்கள்.அதன் அடிப்படையில் அவர்களால் கிடுகிடுவென்று முன்னேறிவிட முடியும் என்கிறார், விண்வெளி நிபுணர் பீட்டர் பாண்ட்.

பூமியில் மட்டுமின்றி, விண்வெளியிலும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போட்டி தொடங்கிவிட்டது.

source : dailythanthi

2 comments:

மதுரை சரவணன் said...

thakavalukku nanri...vaalththukkal

Unknown said...

@மதுரை சரவணன் : thanks for ur visit