Monday, 25 July 2011
24 கோடி யூத்கள் ரெடி
இப்போதில் இருந்து படிப்படியாக அதிகரித்து 2030ல் இந்தியாவின் வேலைபார்க்கும் இளைஞர்கள் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும்.இவர்கள் உலகின் பல நாடுகளில் பரவி இருப்பர்.
இதே கால கட்டத்தில், சீனாவில் ஒரு கோடி பேர்தான் வேலை செய்யும் யூத்களாக இருப்பர். பிரேசிலிலோ ஒரு கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்களாக இருப்பர்.
கருத்தரிப்பு விகிதம் - மக்கள் தொகை பெருக்கம் இரண்டுமே சரிநிகர் சமமாக இந்தியாவில் இருக்கும். பிரேசில்,சீனாவில் பிறப்பும் குறைவு; இறப்பு சதவீதமும் குறைவு. இதனால் வயதானவர்கள் எண்ணிக்கை கூடும்.
இந்த நாடுகளுடன் மட்டுமல்ல, அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது,அடுத்த இருபதாண்டில் நிலைமை வெகுவாக நமக்கு சாதகமாக இருக்கும்.
இதையே இன்னொரு கோணத்திலும் சர்வே எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இப்போதுள்ள மக்கள் தொகையில், 72 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைவானவர்களாம். 47 சதவீதம் பேர் 20 வயதுக்கு குறைவானவர்களாம்.இதை வைத்து கணக்கிட்டாலே, அடுத்த இருபதாண்டில் நம் நாடு எந்த அளவில் உலகில் 'இளமை'யாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்போது இந்தியாவின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி என எல்லாவற்றிலும் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.ஸோ வல்லரசு கனவு நினைவாகப் போகிறது.
source : தினகரன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாக்கு பலிக்கட்டும் :)
@ஆமினா : விரைவில் வரட்டும் அந்த பொன்னாள்
Post a Comment