Monday, 13 June 2011

அன்னை தெரசா!

இந்தியா வந்திருந்த உலக வங்கி தலைவர் பார்பர் கோவைல் அன்னை தெரசாவை சந்தித்து,"அவரது அனாதை இல்லத்திற்கோ, சமூக சேவைக்கோ தனது வங்கியின் உதவி ஏதாவது தேவைப்படுமா' என்று கேட்டார்.
"உலக வங்கியா? அப்படி என்றால் என்ன? அது என்ன செய்கிறது?' என்று அன்னை தெரசா கேட்டதும், பார்பர் ஆடி போய்விட்டார்.
அன்னை தெரசா அவரிடம் சொன்ன இன்னொரு விஷயம் கோவைலை மேலும் ஆச்சரியப்பட வைத்தது.
"நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்டதில்லை, அவர்களாகவே முன் வந்து உதவினால்தான் ஏற்றுக் கொள்கிறேன். பேங்கில் வட்டிக்கு கடன் வாங்கி ஏழைகளுக்கு உதவும் அளவுக்கு எனக்கு வருமானம் எதுவும் கிடையாது' என்று சொல்லி விட்டார் அன்னை தெரசா.

courtesy : dinamalar

Saturday, 4 June 2011

ரத்தம் - உயிர் காப்பாற்றும்!

ஆண்கள் தங்கள் எடையில் கிலோவுக்கு 26 மில்லி லிட்டர் பெண்கள் 1 கிலோவுக்கு 18 மில்லி லிட்டர். அந்த அளவுக்கு தேவைக்கு அதிகமாகவே ரத்தத்தை உடலில் கொண்டிருக்கின்றனர். இதில் கிலோவுக்கு 8 மில்லி லிட்டர் வீதம் ஒருவர் ரத்தத்தை தானமாக கொடுத்தால், அவருக்கு எந்த தீங்கும் வராது. ரத்த தானம் செய்த பிறகு ரத்தத்தின் நீர் பகுதி (92%) இரண்டே நாட்களிலும், அணுக்கள் பகுதி 21 நாட்களுக்குள்ளும் மீண்டும் உடலுக்கும், எந்த மருந்தும் உணவும் இன்றியே கிடைத்து ரத்தம் ஊறிவிடுகிறது. விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற ரத்ததானம் மிகவும் அவசியம்.


Courtesy : Dinamalar

Friday, 3 June 2011

மரம் வளர்க்கும் அணில்கள்!

அணில்கள் விதைகளை, பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து புதைக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், எங்கே புதைத்து வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றன. அவ்வளவு தான் அவைகளின் ஞாபகசக்தி. உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மரங்கள் தானாகவே முளைப்பதற்கு இதுவே காரணம் என்று மதிப்பிடப்படுகிறது.








Courtesy : Dinamalar

கப்பலும் - கொடியும்!

கறுப்பு கொடி ஒரு கப்பலில் பறந்தால், அது கடற்கொள்ளைகாரர்களின் கப்பல். சிவப்பு கொடி பறந்தால், அது புரட்சிக்காரர்களின் கப்பல். வெள்ளை கொடி பறந்தால் அது எதிர்படும் எந்த கப்பலோடும் சமாதானமாக இருக்க விரும்புகிறது என்று பொருள். மஞ்சள் கொடி பறந்தால்? தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி செல்கிறது என்று பொருள். அதை பார்த்ததுமே மற்ற கப்பல்கள் (கறுப்பு கொடி கப்பல் உட்பட ஓடிவிடுமாம்).








Courtesy : Dinamalar